Friday, December 27, 2024
HomeWorldதீக்கோழி மனிதர்கள் ஆச்சரியம் ஆனால் உண்மை.

தீக்கோழி மனிதர்கள் ஆச்சரியம் ஆனால் உண்மை.

இந்த உலகில் என்னதான் அறிவியல் பூர்வமாக சில கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தாலும் இயற்கையாக உருவாகும் சில நிகழ்வுகளை மாற்றவே முடியாத நிலைதான் காணப்படுகிறது அல்லவா?

ஆம் சிம்பாப்வே நாட்டில் வசிக்கும் பழங்குடி இனத்தவர்களில் ஒரு பகுதியினர் கலாசாரத்தில் மட்டுமன்றி உடல் ரீதியாகவும் மனிதர்களிடமிருந்து வேறுபட்டு காணப்படுகின்றனர் என “daily star” என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி அவர்கள் மனிதனின் உடல் அமைப்பையும் நெருப்புக்கோழியின் கால்களையும் கொண்டுள்ளனர் என்றால் ஆச்சரியமாக உள்ளதா. அதுதான் உண்மை.

இவர்களுக்கு காலில் இரண்டு அல்லது மூன்று விரல்கள் மட்டுமே உள்ளன.

” Daily star” ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

டோமா பழங்குடியினர் என்று அழைக்கப்படும் இந்த பழங்குடியின மக்கள் வாடோமா அல்லது பாண்ட்வானா பழங்குடியினர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

அவர்களின் பாதங்கள் நெருப்புக்கோழி போல இருப்பதால், அவர்கள் பெரும்பாலும் நெருப்புக்கோழி மக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த பழங்குடியினர் சிம்பாப்வேயின் கன்யெம்பா பகுதியில் வசிக்கின்றனர்.

இந்த முழு சமூகமும் Ectrodactyly எனப்படும் ஒரு சிறப்பு மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், அவர்களின் கால்களில் 5 க்கு பதிலாக 2 விரல்கள் மட்டுமே உள்ளன. இந்த மரபணு மாற்றம் லோப்ஸ்டர் க்ளா சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பிரச்சனையால் இந்த பழங்குடியினத்தில் குழந்தைகள் பிறக்கும் போதே, பாதங்களில் முழுமையாக ஐந்து விரல்களும் இருப்பதில்லை. இரண்டு அல்லது மூன்று விரல்கள் தான் இருக்கின்றன. அந்த விரல்களும் உள்நோக்கி வளைந்து காணப்படுகிறது.

டோமா பழங்குடியினரின் ஒவ்வொரு நான்காவது குழந்தைக்கும் இந்த பிரச்சனை இருப்பதாக நம்பப்படுகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் கால்களில் 3 விரல்களோடு தான் காணப்படுகிறார்கள்.

இந்தப் பழங்குடியின மக்கள் வேறு சமூகத்தில் திருமணம் செய்துகொள்வதை விரும்புவதில்லை. ஏனெனில் இரட்டை விரல்களுடன் பிறப்பதை அவர்கள் வரமாக நினைக்கிறார்கள். அவர்கள் வேறு இன மக்களுடன் கலந்தால் தங்கள் இரட்டை விரல் வரத்தை இழந்து விடுவதாக அஞ்சுகிறார்கள். இவர்களால் சரியாக நடக்கவோ, காலணிகள் அணியவோ முடியாது. ஆனால் மரம் ஏறுவதில் இவர்களை மிஞ்ச யாருமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments