Home Srilanka தமிழ் நீதிபதிகளை அச்சுறுத்தும் சரத் வீரசேகரவைக் கைது செய்! யாழ். நீதிமன்றம் முன்பாகஅடையாள உண்ணாவிரதம்.

தமிழ் நீதிபதிகளை அச்சுறுத்தும் சரத் வீரசேகரவைக் கைது செய்! யாழ். நீதிமன்றம் முன்பாகஅடையாள உண்ணாவிரதம்.

0

நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவை உடனடியாகக் கைது செய்யுமாறு வலியுறுத்தி அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு முன்பாக இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தி ஈடுபட்டார்.

“தமிழ் நீதிபதிகளை அச்சுறுத்தும் சரத் வீரசேகரவைக் கைது செய்”, “இனக்கலவரத்துக்கு ஏதுவாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை முற்றுகையிட முனையும் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து நீதியின் முன் நிறுத்து” உள்ளிட்ட கோஷங்கள் அடங்கிய பதாதைகளைக் காட்சிப்படுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version