வாக்னர் கூலிப்படை குழுவின் தலைவர் விமானவிபத்தில் உயிரிழந்துள்ளார் என வெளியான தகவல்கள் குறித்து நான் ஆச்சரியமடையவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாக்னர் தலைவரின் உயிரிழப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புட்டினின் தொடர்புஇல்லாமல் ரஸ்யாவில் எதுவும் இடம்பெறுவதில்லை என பைடன் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவில் இடம்பெற்ற விமானவிபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாவதாக பிபிசி தெரிவித்துள்ளது.
ரஸ்ய விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது அதிலிருந்த பத்துபேரும் உயிரிழந்துள்ளனர் அதில் பயணம் செய்தவர்களில்; வோக்னர் கூலிப்படையின் தலைவரின் பெயரும் உள்ளது என ரஸ்யாவின் உள்நாட்டு விமானப்போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை வாக்னர் தலைவரின் தனிப்பட்ட விமானத்தை ரஸ்யா சுட்டுவீழ்த்தியது என்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின்றன.