Home World ரஸ்யாவின் பிடியில் உள்ள கிரிமியாவில் உக்ரைன் படையினர்.

ரஸ்யாவின் பிடியில் உள்ள கிரிமியாவில் உக்ரைன் படையினர்.

0

ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவின் கடற்பரப்பில் தனது படையினர் தரையிறங்கியுள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஸ்ய படையினருக்கு எதிராக இதுவரை முன்னெடுக்கப்பட்ட மிகவும் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு ரஸ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியாவில் தனது படையினர் தரையிறங்கியுள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

கிரிமியாவின் மேற்குகடற்கரை பகுதியில் ஒலெனிவ்கா மாயக் குடியிருப்புகளிற்கு அருகில் உக்ரைன் படையினர் தரையிறங்கியுள்ளனர். உக்ரைன் கடற்படையினருடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் ஆக்கிரமிப்பாளர்களுடன் மோதலில் ஈடுபட்டனர் எதிரிப்படையினர் பெருமளவு இழப்புகளை சந்தித்தனர் அவர்களின் ஆயுததளபாடங்கள் அழிக்கப்பட்டன என உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் சுதந்திரதினமான இன்று அங்கு உக்ரைனின் தேசியக்கொடியும் ஏற்றப்பட்டதாக உக்ரைன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

2014 இல் ரஸ்யா கிரிமியாவை ஆக்கிரமித்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version