Home Srilanka யாழ். சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்தது !

யாழ். சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்தது !

0

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்று நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்தது.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.

நேற்று 23 புதன்கிழமை இரவு எட்டு மணி அளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து 35 பயணிகளை ஏற்றிக் கொண்டு இந்த பஸ் புறப்பட்டதாகவும் இன்று அதிகாலை நான்கு முப்பது மணி அளவில் நீர்கொழும்பு தளுவகொட்டுவ பிரதேசத்தில் வைத்து திடீரென தீ பற்றி கொண்டதாகவும் உடனடியாக பஸ்ஸில் இருந்த பயணிகள் காப்பாற்றப்பட்டதுடன் வேறு வாகனங்களில் அவர்கள் விமான நிலையம் சென்றதாகவும் நீர்கொழும்பு தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் காரணமாக பஸ் முற்றாக எரிந்து உள்ளது.

பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version