Home Srilanka திருகோணமலையில் நடந்தது என்ன?

திருகோணமலையில் நடந்தது என்ன?

0

திருகோணமலை, ஜமாலியா பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர், போதைப் பொருள் குற்றச்சாட்டில் இன்று பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை அவர் பொலிஸ் காவலில் , திருகோணமலை பொலிஸ் தலைமையக தடுப்புக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்

இந்நிலையில் குறித்த இளைஞர் இன்று மாலை தற்கொலைக்கு முயற்சித்து காயமடைந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர். (இது தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்)

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும், பொலிசாரின் தடுப்புக் காவலில் இருந்த நிலையிலேயே இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது

அதனையடுத்து திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தின் முன்வாயில்கள் முழுமையாக இழுத்து மூடப்பட்டு, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இளைஞரின் மரணம் தொடர்பான தகவல் அறிந்தவுடன் ஜமாலியா பிரதேசவாசிகள் பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். பொலிசாரின் தாக்குதலில் இளைஞர் உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர்கள், குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக பொலிசார் தெரிவிக்கும் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளனர்

ஶ்ரீலங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா நெட்வர்க் முக்கியஸ்தர்கள் பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்ட போது கிடைத்த தகவல்களே இவையாகும்.

ஜமாலியா பிரதேசத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்த உதவுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு பொலிஸ் அத்தியட்சகர் , சாதகமாக பதிலளித்திருந்தார்

இந்நிலையில் உயிரிழந்த இளைஞரின் மரணம் தொடர்பில் நாளைய தினம் எம்மால் முடிந்த தலையீடுகளை வழங்கத் தயாராக இருக்கின்றோம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version