கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு மற்றும் கிறிசலிஸ் நிறுவனம் ஆகியவற்றின் நிதி அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட பாரம்பரிய உணவுப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இன்றையதினம் (23) இடம்பெற்றிருந்தது.
கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்துள்ள பசுமை பூங்கா வளாகத்தில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவிப்பணிப்பாளர் (பதில்) ச.சசீபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர் திரு.சு.முரளிதரன் அவர்களும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி)திருமதி.நளாயினி இன்பராஜ் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
கெளரவ விருந்தினர்களாக உதவி மாவட்டச்செயலர் திருமதி.ஹ.சத்தியஜீவிதா அவர்களும் கிரிசலிஸ் நிறுவன வடமாகாணத்திற்கான திட்ட முகாமையாளர் திரு.M.பிரபாகரன் ஆகியோரும்,விருந்தினர்களாக மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.
உற்பத்தியாளர்களின் சுயதொழிலினை மேம்படுத்துவதனூடாக உள்ளூர் உற்பத்தியை அதிகரித்து முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்டு குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.