திருகோணமலை துறைமுகம் மற்றும் நிலாவெலி புறாத்தீவை பொதுமக்கள் மீண்டும் பார்வையிடுவதற்கான திட்டத்தை கடற்படை ஆரம்பித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், பாடசாலை மாணவர்கள், கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடற்படையின் மத்திய பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, திருகோணமலை துறைமுகம் மற்றும் நிலாவெலி புறா தீவினை பார்வையிடுவதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், குறைந்த கட்டணங்களுடன் தரமான சேவை வழங்கப்படுமென கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.