2009இல் தமிழர்களை மகிந்த தோற்கடித்தது போல 2023இல் யாழ்ப்பாண அணியை கண்டி அணி தோற்கடித்து வெளியேற்றியதாகவே இது அர்த்தப்படுத்தப்பட்டு பதிவிடப்பட்டிருக்கிறது.
விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்பதே பொதுவான கருத்தாக கூறப்படுவதுண்டு. ஆனால் இங்கு விளையாட்டின் மூலமும் இனவாதக் கருத்துக்களே விதைக்கப்படுகின்றது.
சிங்களவர்கள் ஒரு போதும் மகாவம்ச மனநிலையிலிருந்து மாறமாட்டார்கள் என்பதை இது உட்பட அண்மைக்கால சம்பவங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
அவர்கள் மாறும் வரை, உண்மையான பௌத்தநெறிகளை பின்பற்றும்வரை இந்த நாடு முன்னேற வாய்ப்பில்லை என தேசியத் தலைவர் எப்போதோ கணித்துக்கூறியது இப்போதும் நிதர்சனமாகவே உள்ளது.