கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக 15 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா முழுவதும் 1000 இற்கும் மேற்பட்ட காட்டுத் தீ பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், இது மோசமான பருவநிலை மாற்றத்தை காட்டுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் 36 ஆயிரம் மக்கள் வசதிக்கும் மேற்கு கொலேனாவிலுள்ள அதிகளான கட்டிடங்கள் காட்டுத் தீயினால் தீக்கிரையாகியுள்ளன. இதனால் 2400 இற்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சூழலில் ஜெலோநைவ் நகரை காட்டுத் தீ அண்மித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீ காரணதாக நகரிலிருந்து மக்களை வெளியேறுமாறு விதிக்கப்பட்ட காலக்கெடு நிறைவடைந்த நிலையில் மக்கள் மகிழுந்து அல்லது விமானம் ஊடாக வெளியேறியுள்ளனர்.
20 ஆயிரம் மக்களில் 19 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
காட்டுத் தீயினால் நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.