யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்டது என்று ஜனாதிபதி செயலகம் இன்று (18) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குத் துணைவேந்தராகச் செயற்படும் வகையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி ரணில் நியமித்துள்ளார் என்றும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.