ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் இருந்து இரண்டு விசைப்படகுகளில் 9 மீனவர்கள், கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி அதிகாலையில், கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சிறையில் அடைத்தனர். மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் ராமநாதபுரம் மீனவர்கள் 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் அனைவரும் இன்று காலை கொழும்பு நகரில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர்.
அவர்களை தமிழ்நாடு அரசு சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் வாகனம் மூலம் 9 மீனவர்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.