Sunday, December 29, 2024
HomeSrilankaமீள்குடியேற்ற பகுதிகளில் கண்ணிவெடி அகற்றல் தொடர்பான பிரச்சினைகள் ஆராய்வு!

மீள்குடியேற்ற பகுதிகளில் கண்ணிவெடி அகற்றல் தொடர்பான பிரச்சினைகள் ஆராய்வு!

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகளின்போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று(17) வியாழக்கிழமை காலை 9.30மணிக்கு இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மீள்குடியேற்ற பகுதிகளான பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுவரும் கண்ணிவெடி அகற்றல் தொடர்பான விடயங்களை குறித்த பகுதிகளில் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நிறுவன அதிகாரிகள் விளக்கமளித்திருந்தனர்.

மேலும், குறித்த பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

மேலும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு முன்னேற்பாடாக துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் அடுத்த வாரத்தில் குறித்த பகுதிகளுக்கு கள விஜயமொன்றை முன்னெடுப்பதாகவும் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.

குறித்த பகுதிகளிலிருந்து கடந்தகால அசாதார சூழ்நிலை காரணமாக 172 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் 65 குடும்பங்கள் மீள்குடியேறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக் கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலணியின் வட கிழக்கு அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் மேலதிக செயலாளர் எல். இளங்கோவன், மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) நளாஜினி இன்பராஜ், திட்டமிடல் பணிப்பாளர் கி.ஸ்ரீபாஸ்கரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், தேசிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டு மையத்தின் அதிகாரிகள், இராணுவ கண்ணிவெடி அகற்றல் பிரிவின் அதிகாரிகள், SHARP, MAG, RAHAMA, DASH, UNDP, OfERR CEYLON, SHARP, The HALO Trust ஆகிய நிறுவன அதிகாரிகள், மாவட்ட செயலக விடயதான உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments