மகாராஷ்டிரத்தின் கோலாப்பூரில் புதன்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மும்பையிலிருந்து 375 கிமீ தொலைவில் மேற்கு மகாராஷ்டிரத்தில் கோலாப்பூர் அமைந்துள்ளது. இங்கு புதன்கிழமை காலை 6.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 3.4 ரிக்டர் அலகுகளாகப் பதிவானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
ஆகஸ்ட் 11 ஆம் தேதி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் 112 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் ரிக்டரில் 4.3 ரிக்டர் அலகுகளாகப் பதிவானது தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.