ரஷியாவின் காகசஸ் குடியரசின் தாகெஸ்தானில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரஷ்ய நாளிதழான இஸ்வெஸ்டியாவின் டெலிகிராமில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு சாட்சியின்படி, கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீப்பிடித்து பெட்ரோல் நிலையத்திற்கு பரவியதாக கூறப்பட்டது.
மேலும், ரியா நோவோஸ்டி செய்தி நிறுவனத்தால் டெலிகிராமில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில், “ஒரு கட்டிடத்தில் இருந்து தீப்பிழம்புகள் எழுவதைக் காட்டியது. அதைத் தொடர்ந்து ஒரு பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. சுமார் 600 சதுர மீட்டர் (6,450 சதுர அடி) பரப்பளவில் தீ பரவியது. மேலும், சம்பவ இடத்தில் 260 தீயணைப்பு வீரர்கள் இருப்பதாக அமைச்சகம் கூறியுள்ளது.