பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்த ஜனனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்கூல் யூனிபார்மில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் திரையுலகிலும் நடித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜனனியும் தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 70 நாட்கள் வரை தாக்கு பிடித்தார் என்பதும் இவர் நிகழ்ச்சியில் இருந்து வரை பிக்பாஸ் வீடு கலகலப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி சமீபத்தில் பள்ளி சீருடையில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஸ்கூல் டாஸ்க்கின் போது இவர் அச்சு அசலாக பள்ளி சிறுமி போலவே இருந்ததாக கூறப்பட்ட நிலையில் இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.