மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன் மரணத்திற்கான காரணம் வெளியானது.
மன்னார் மடு திருத்தலத்தில் நேற்று ஞாயிறு (13) இரவு திடீரென உயிரிழந்த மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன்(வயது-28) விச ஜந்து ஒன்றின் தாக்குதலின் காரணமாக வே உயிரிழந்துள்ளதாக சடல பரிசோதனையின் மூலம் தெரிய வந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன்(வயது -28) நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மடுவில் காலமானார்.
கடமை நிமித்தம் மடுத் திருவிழாவுக்குச் சென்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இரவு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று திங்கட்கிழமை (14) காலை சடல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது அவரது உடலில் விச ஜந்து ஒன்று தாக்கிய நிலையில் உயிரிழந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அவரது உடலில் விஷம் பரவியதன் காரணத்தினாலேயே மரணம் சம்பவித்துள்ளதாகவும் சடல பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக தெரிய வருகிறது.