இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செங்கோட்டை சென்றார். அவரை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இணைஅமைச்சர், பாதுகாப்பு செயலர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், முப்படை மற்றும் டெல்லி போலீஸின் அணி வணக்கத்தை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து முப்படைகளில் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார். 21 குண்டுகள் முழங்க தேசிய வணக்கம் செலுத்தினார். தேசியக் கொடிக்கு ஹெலிகாப்டர் மீது மலர் தூவப்பட்டது.