Sunday, December 29, 2024
HomeSrilankaஉங்கள் இழப்பை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் உங்களது நினைவுகளை எமது வருங்கால சமூதாயத்திற்கு கடத்தி...

உங்கள் இழப்பை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் உங்களது நினைவுகளை எமது வருங்கால சமூதாயத்திற்கு கடத்தி செல்லுகிறோம்.

இலங்கை அரசு தொடர்ந்து தமிழர்கள் மீது திட்டமிட்ட இனவெறித் தாக்குதல்களை நடாத்தி தமிழர்களை கொன்று குவித்தது.அந்த வகையிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகை தந்திருந்த பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து 2006 ஆகஸ்ட் 14 இலங்கை வான் படையினரால் செஞ்சோலை வளாகம் மீது மிகவும் நாகரீகமற்ற காட்டுமிராண்டித்தனமான விமானக்குண்டுத்தாக்குதல்களை இலங்கை வான்படை நிகழ்த்தியிருந்தது.

இதன்போது சுமார் 61 பாடசாலை மாணவிகள் கொலைசெய்யப்பட்டதுடன்,சுமார் 155 பேருக்கு மேலானோர் படுகாயமடைந்தன்ர்.இந்த குண்டுத்தாக்குதலில் புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயம், விசுவமடு மகா வித்தியாலயம், உடையார்கட்டு மகா வித்தியாலயம், முல்லைத்தீவு மகா வித்தியாலயம், குமுழமுனை மகா வித்தியாலயம், முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி, செம்மலை மகா வித்தியாலயம், ஒட்டிசுட்டான் மகா வித்தியாலயம், முருகானந்தா மகா வித்தியாலயம், தர்மபுரம் மகா வித்தியாலயம், பிரமந்தனாறு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் பயிலும் மாணவிகளே இறந்தனர்.

இந்த தாக்குதலுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமை அமைப்பு,தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு,யுனிசெப்,போர்நிறுத்த கண்காணிப்புக்குழு,போன்ற அமைப்புக்கள் கண்டணங்களை தெரிவித்த போதும் இலங்கை அரசு விசாரணை நடாத்த மறுதளித்தது.ஈழத்தமிழர் வரலாற்றிலே அரச பயங்கரவாதத்தால் தொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது.அதன் ஒரு அங்கமே செஞ்சோலை படுகொலையாகும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments