Home Srilanka தாதியர்களின் அலட்சியபோக்கு-பிறந்த குழந்தை தரையில் விழுந்து உயிரிழப்பு.

தாதியர்களின் அலட்சியபோக்கு-பிறந்த குழந்தை தரையில் விழுந்து உயிரிழப்பு.

0

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாதியர்களின் அலட்சியத்தால் குழந்தை தரையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தமது சிசு நேற்று (13ஆம் திகதி) காலை உயிரிழந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுரம் ரவொவ கல்லஞ்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக கல்லஞ்சிய வைத்தியசாலையில் கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அன்றைய தினமே அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் மகப்பேறு விடுதிக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால், பிரசவத்தின்போது தாதியர்களின் அலட்சியத்தால் தங்களின் குழந்தை தரையில் விழுந்ததாக அவரும் அவரது கணவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

உயிரிழந்த குழந்தையின் தாய் தக்சிலா உதயங்கனி தெரிவிக்கையில்,

“எனது குழந்தை பிறந்த நிலையில், தரையில் விழுந்தது.அருகில் இருந்தும் குழந்தையை யாராலும் பிடிக்க முடியவில்லை.குழந்தை தரையில் விழுந்ததும், குழந்தையை எடுத்துச் சென்றனர்”.

உயிரிழந்த குழந்தையின் தந்தை குமாரசிங்க திஸாநாயக்க,

“குழந்தை பிறந்தவுடன் அதனை பிடிக்க யாரும் இல்லை. குழந்தை தரையில் விழுந்தது. குழந்தையின் தலையில் அடிபட்டது. பின்னர் ஒரு தாதி வந்து குழந்தையை கொண்டு ஓடினார் .அம்மாவிடம் காட்டவே இல்லை.அந்த இரண்டு விடுதிகளில் இருந்தவர்களும் குழந்தை தரையில் விழுந்ததாகச் சொன்னார்கள்.

சம்பவத்தையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட தமது குழந்தை நேற்று காலை உயிரிழந்துள்ளதாக குழந்தையின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த குழந்தையின் தாய் தக்சிலா உதயங்கனி,

“குழந்தை கவலைக்கிடமாக இருப்பதாக சொன்னார்கள். இதயம் குறைவாக வேலை செய்கிறது என்று சொல்கிறார்கள். அவர்கள் அதை ஏற்கவில்லை. குழந்தை போதுமான அளவு வளரவில்லை என்று சொன்னார்கள்.”

அநுராதபுரம் வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்ட தாயின் நோயறிதல் குறிப்பிலும் பிரசவத்தின் போது குழந்தை தரையில் விழுந்து குழந்தையின் தலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை பிறக்கும் போது அழவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதயக் கோளாறு காரணமாக குழந்தை உயிரிழந்ததாக இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version