சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
அன்றைய தினம் இரவு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து உயிர் சிகிச்சைக்காக நீதிமன்ற அனுமதி உடன் காவிரி ஹாஸ்பிடலுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டது.
தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் விசாரித்தனர். இதற்கிடையில், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் தலைமறைவானார்.
அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் வலை வீசி தேடி வந்த நிலையில், கொச்சியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பெயரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரை சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது.
அவர் கைது செய்யப்படும் நிலையில், அவரை டெல்லி கொன்று சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கக்கூடும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் சென்னையில் இருந்து கொச்சி சென்றாரா? அப்படி அவர் சென்றால் அவர் பெயர் விமான பயணிகள் பட்டியலில் இடம் பெறாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.