Home World US News ஹவாய் தீவில் பயங்கர காட்டுத் தீ: உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு.

ஹவாய் தீவில் பயங்கர காட்டுத் தீ: உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு.

0

ஹவாய் காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89ஆக அதிகரித்துள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹவாயில் காட்டுதீயினால் முற்றாக அழிவடைந்துபோன லகையினா பிரதேச மக்கள் தங்கள் பகுதிகளிற்கு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இழப்புகள் குறித்த விபரங்களை அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும், தங்கள் ஆடைகளுடன் அந்த பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள் தாங்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்கவேண்டிய நிலையேற்படலாம் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்தவாரம் ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரம் முற்றாக அழிவடைந்துள்ளது.

இந்நிலையில் ஹவாயின் சில பகுதிகளில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள அதேவேளை மோசமாக பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதால் அந்த பகுதிகளிற்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

லகைனா நகரில் அமைந்துள்ள பகுதியில் தொடர்ந்தும் மின்சாரமும் நீரும் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீச்சம்பவத்தின் பின்னர் கரையோர பொலிஸார் நகரின் துறைமுக பகுதியில் நீரிலிருந்து 17 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version