நைஜீரியாவிலுள்ள பழமையான மசூதியின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 07 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 23 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜீரியாவின் கடுனா மாகாணம் ஜாரியா நகரில் உள்ள மசூதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நூற்றுக்கணக்கானோர் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலே மசூதியின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து தொழுது கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
குறித்த விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த 23 பெருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பில் அரச அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த மசூதி, 1830-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட பழமையான மசூதி என்று கூறியிருந்தனர்.
இச்சம்பவம் குறித்து கடுனாவின் ஆளுநர் உபாசானி கூறும்போது, இந்த விபத்து இதயத்தை உடைக்கிறது என்றும் இந்த பேரழிவு குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.