திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (12.08.2023) காலை 9.00 மணி தொடக்கம் 10.30 மணி வரை நடைபெற்றுள்ளது.
திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதியை மறித்து இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ”சிங்கள தமிழ் முஸ்லிம் சகோதரத்துவத்தைக்
குழப்புகின்ற ஆளுநரை அனுப்புவோம்.”
”புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப்பணியை நிறுத்த சம்பந்தன் யார்” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.