மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாகப் பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடக் கட்டடத்தில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆண் ஒருவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அந்தப் பகுதி மக்கள் கொக்குவில் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
மைக்கல் என்று அழைக்கப்படும் நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்தப் பகுதி பொதுக் கட்டடங்களான சந்தை மற்றும் பஸ் தரிப்பிடங்களில் தங்கி வாழ்ந்து வந்தவர்.
இவர் தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னமும் தெரியவரவில்லை என்று விசாரணைங்களை மேற்கொண்டு வரும் கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.