செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று வேகமாக மோதியது.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோட்டிவிட்டார். இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.