ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கும் வுனுகோவோ விமான நிலையத்திற்கும் இடையில் உள்ள மொஸ்கோவின் – ஒடின்ட்சோவோ நகரில் கிடங்கு ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
இது தொடர்பில், ரஷ்யாவின் அவசர சேவை பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. நோவோ – ஓகாரியோவோவில் உள்ள ஜனாதிபதி புட்டினின் இல்லத்திலிருந்து 6.5 கிலோமீற்றர் தொலைவில் குறித்த கிடங்கு உள்ளது.
கிடங்கில் எவ்வாறு தீப்பற்றியது என்பது பற்றிய தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. எனினும் குறித்த பகுதியில் இரண்டாயிரம் சதுர மீற்றர் அளவில் தீ பரவியுள்ளதாக அந்த நாட்டின் அவசர சேவையை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.