சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பல் “HAI YANG 24 HAO” கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த ஆய்வுக் கப்பலான “HAI YANG 24 HAO” நேற்று (10.08.2023) உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கொழும்பை வந்தடைந்த 129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பேர் கொண்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர் மற்றும் கமாண்டர் ஜின் சின் தலைமை தாங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் (12.08.2023) நாளை இலங்கையிலிருந்து புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.