இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்டி அரிஃபுல் இஸ்லாம் (tareq md ariful islam) இன்று (11) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்தார்.
இன்று ஆளுநர் செயலகத்தில் வைத்து நட்பு ரீதியான சந்திப்பு இருவருக்கும் இடையில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கலந்துரையாடல்களைத் தொடர்ந்து நினைவு சின்னங்கழும் வழங்கி வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.