Home Uncategorized 2,000 நாட்கள் நிறைவு : நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்.

2,000 நாட்கள் நிறைவு : நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்.

0

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி நேற்று புதன்கிழமை (09.08.2023) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது.

கடந்த யுத்த காலத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி உறவுகளால் வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தமது இரத்தச் சொந்தங்களுக்கு நீதி கோரி இன்றுடன் 2,000 நாட்கள் பூர்த்தியாவதையொட்டி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.

வடக்கு – கிழக்கு இணைந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version