Home Srilanka யாழ் ஆறுகால்மடம் பகுதியில குழந்தையின் தலை ஒன்று காணப்படுவதால் பரபரப்பு!

யாழ் ஆறுகால்மடம் பகுதியில குழந்தையின் தலை ஒன்று காணப்படுவதால் பரபரப்பு!

0

யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் பச்சிளம் சிசுவொன்றின் தலைப்பகுதி வீதியோரம் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிசு மீட்கப்பட்ட பகுதிக்கு அண்மையில் கோம்பயன் மணல் இந்து மயானம் உள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது உயிரிழக்கும் சிசுக்கள் அங்கு அடக்கம் செய்யப்படுகிறது.

அங்கு அடக்கம் செய்யப்பட்ட சிசுவின் சடலத்தை நாய்கள் இழுத்து வந்ததா என்ற சந்தேகத்தில் பொலிசார் மயானத்தையும் ஆய்வு செய்தனர். பொலிசார் அங்கு சென்ற போது, நாயொன்று வாயில் சிசுவின் கையை கவ்வியபடி வந்துள்ளது.

அந்த பகுதியில் சிசுக்களின் பாகங்கள் பல நாய்களால் உண்ணப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டபடி காணப்பட்டன.

உடலங்கள் முறையாக புதைக்கப்படாமல் கிடங்கொன்றினுள் வீசப்பட்டு வருவதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்கலாமென கருதப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு தற்போது நீதிவான் பார்வையிட செல்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version