பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது .பாகிஸ்தானில் தற்போது பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றின் பதவிக்காலம் எதிர்வரும் 12 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
எனினும் பதவிக்காலம் முடியும் முன்னரேயே நாடாளுமன்றை கலைக்குமாறு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அந்நாட்டு ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தார்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தை நேற்று நள்ளிரவு கலைத்து ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார்.