Home Srilanka எமது கைகளில் அதிகாரங்களைத் தந்தால்நாமே எமது பிரச்சினைகளைத் தீர்ப்போம்!- சபையில் சாணக்கியன் சுட்டிக்காட்டு.

எமது கைகளில் அதிகாரங்களைத் தந்தால்நாமே எமது பிரச்சினைகளைத் தீர்ப்போம்!- சபையில் சாணக்கியன் சுட்டிக்காட்டு.

0

எமக்கான அதிகாரங்கள் எமது கைகளில் தரப்பட்டால் மாத்திரமே எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (09) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அமைச்சரவையில் தமிழர் ஒருவர் அமைச்சராக அங்கத்துவம் வகித்தாலும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. இந்தக் காரணத்தினாலேயே, தமிழர்கள் அதிகாரப் பரவலாக்கலைக் கோருகின்றார்கள்.

உண்மையில் மீன்பிடித்துறை அமைச்சரிடம் கிழக்கு மாகாணம் தொடர்பாகப் பல பிரச்சினைகளை முன்வைத்திருந்தாலும் இதுவரை அவற்றுக்கான தீர்வுகள் கிடைக்கவில்லை.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பில் அதிகூடிய மீன்பிடித் தொழிலாளர்கள் இருக்கின்றனர். எனவே, அவர்களது வாழ்வாதாரப் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேலண்டும். உரிய துறைக்கு ஒரு தமிழரே அமைச்சராக இருக்கின்றார்.

எனவே, ஒரு அமைச்சரவை அந்தஸ்து இருந்தும்கூட இதுவரை தீர்வுகள் பெறப்படவில்லை என்பதால்தான் நாங்கள் அதிகாரப் பரவலாக்கல் மூலம் எமக்கான அதிகாரங்களைக் கோருகின்றோம். எமது கரங்களில் அதிகாரங்கள் தரப்பட்டால் நாமே எமது பிரச்சினைகளைப் பார்த்துக்கொள்ள முடியும்.” – என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version