முல்லைத்தீவு – விசுவமடு இளங்கோபுரம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
போர்காலங்களிலும், இன்றும் நாடகம் பாடல், கரகம் இதைவிட வசந்தம் ரீவியில் யூட்விட்ரலன் நிகழ்ச்சி மூலம் பாராட்டுக்கள் பெற்ற கலைஞர் த.கலைச்செல்வி (செல்வி) வயது 35 என்ற இளம் தாய் சுகயீனம் காரணமாக காலமாகியுள்ளார்.
குறித்த இளம் தாய் புற்று நோய் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
இரண்டு பிள்ளைகளின் தாயார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.