Home Srilanka காதல் தோல்வியால் ரயில் முன் பாய்ந்து யுவதி தற்கொலை.

காதல் தோல்வியால் ரயில் முன் பாய்ந்து யுவதி தற்கொலை.

0

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதி ஒருவர் இன்று (09) காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனனர்.

தலவாக்கலை டயகம பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய கணபதி அனுஷா தர்ஷனி எனும் யுவதியே இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதி ஹட்டன் நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாகவும் ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் ஐந்து வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும், குறித்த காதலன் பெண்ணின் காதலை உதாசீனம் செய்தமை காரணமாக அப்பெண் தற்கொலை செய்துக் கொண்டதாகவும் ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட யுவதியின் சடலம் காதலனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version