குருந்தூரில் தமிழர்களின் தொன்மையான ஆதிசிவன் கோவிலை அழித்து சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை நியாயப்படுத்தும் விதமாக புத்தக வெளியீடு ஒன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதில் பல பௌத்த சிங்கள கடும் போக்கு இனவாதிகள் உட்பட மைத்திரிபால சிறிசேனவும் பங்குபற்றி இருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த மைத்திரிபால சிறிசேனவைத் தான் 2015 – 2019 காலப்பகுதியில் தமிழர்களின் மீட்பராக காட்டிக்கொண்டு திரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.