வட கொரியாவின் எச்சரிக்கையை மீறி தென் கொரியா அமெரிக்க படைகளுடன் இணைந்து போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வட கொரிய தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.
இந்த நிலையில் வட கொரியாவின் முக்கிய ஆயுத தொழிற்சாலைகளில் அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் நேரில் சென்று ஆய்வு செய்தார். ராக்கெட் லாஞ்ச்சர்கள், ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர், நாட்டின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் விதமாக ஆயுத தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கினார்.