Home Srilanka ரயிலில் பயணித்த சீனப் பெண்ணின் கையை தடியால் தாக்கி கைபேசியை பறிக்க முயற்சி.

ரயிலில் பயணித்த சீனப் பெண்ணின் கையை தடியால் தாக்கி கைபேசியை பறிக்க முயற்சி.

0

தனது கை பேசியால் இலங்கையின் சுற்றாடல் அழகுக் காட்சிகளை வீடியோ செய்தவாறு பயணித்த சீனப் பெண்ணின் கையில் இருந்த கைபேசியை அடித்து பறிக்க எத்தனித்த இரண்டு இளைஞர்களை நாவலப்பிட்டி பொலீசார் கைது செய்துள்ளனர்.

தனது கணவர் பிள்ளைகளுடன் தான் நேசிக்கும் இலங்கையின் அழகை இரசிக்க வந்த இக்குடும்பம் கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை வரைபயணிக்க தமது Tourist guide உடன் பயணித்துக் கொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது…..

கையை சொல்லால் அடித்ததால் கடும் வலியும் காயமும் ஏற்பட்ட போதிலும்இப்பெண் தன் தொலைபேசியை கைவிடவில்லை உடனடியாக செயல்பட்ட சீனப் பெண் தனது இலங்கை சுற்றுலா வழிகாட்டியின் துணையுடன் சீன மொழியில் எழுதப்பட்டு சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்ட முறைப்பாட்டை நாவலப்பிட்டி போலீஸ் நிலையத்திற்கு வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பி உள்ளார்……..

உடனடியாக செயற்பட்ட நாவலப்பட்டிய பொலீசார் ஸ்தலத்துக்கு விரைந்து சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர் இன்னும் ஒருவரை கைது செய்ய உள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்ய சீனப் பெண்ணின் கைபேசியில் சந்தேக நபர்களின் உருவங்கள் இருந்தமை அவர்களைக் கைது செய்ய உதவியாக இருந்ததாக பொலீசார் தெரிவித்தனர்.

பொலீசாரும் தனது வழிகாட்டியும் சக இரயில் பயணிகள் சந்தேக நபர்களைகைது செய்ய வழங்கிய உதவிக்கு சீன பயணிகள் நமது நன்றிகளை தெரிவித்து வாட்ஸ் அப் செயலி மூலம் பொலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version