அங்காடி தெரு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சிந்து. இதன்பின் படங்களில் நடித்து வந்த நடிகை சிந்து திடீரென மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்துள்ளார்.
இந்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகை சிந்து கடந்த சில நாட்களாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகை சிந்து மரணமடைந்துள்ளார். 42 வயதாகும் நடிகை சிந்துவின் மரண செய்தியை கேட்டு திரையுலகில் உள்ள பலரும் அதியடைந்துள்ளனர்.