Home World UK News பிரித்தானியாவில் மக்களிடம் வேகமாக பரவி வரும் புதிய வகை வைரஸ்!

பிரித்தானியாவில் மக்களிடம் வேகமாக பரவி வரும் புதிய வகை வைரஸ்!

0

பிரித்தானிய முழுவதும் Eris எரிஸ் என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கோவிட் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் குறித்த வைரஸ் தாக்கமானது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிக அளவிலான மக்களுக்கு தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்று அதிகமான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் இது தொடர்பில் ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப்பட்டது.

மேலும், இந்த வைரஸ் பிரித்தானியாவில் 7 பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாகவும், இதற்கு கிரேக்க தெய்வத்தின் பெயரான எரிஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version