அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாகத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை அனுமதி கேட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.