நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்கள் மூலமாக பாப்புலர் ஆனவர். அவர் அதற்கு பிறகு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
அந்த ஷோவில் அவர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் நெருக்கமாக இருப்பது போல காட்டப்பட்டது. ஆனால் ராபர்ட் எனக்கு வெறும் நண்பர் மட்டும் தான் உறுதியாக கூறி கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரச்சிதா.
இந்த நிலையில் தற்போது ரச்சிதா ஒரு சீரியல் இயக்குனரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார் என்றும் புது கிசுகிசு தொடங்கி இருக்கிறது.
தற்போது ரச்சிதா இலங்கையில் இருக்கிறார். அங்கு அவர் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு குழந்தை தத்தெடுப்பது பற்றி ரச்சிதா போட்டிருந்த பதிவு வைரல் ஆகி இருந்தது. இந்த நிலையில் அவரது இரண்டாம் திருமணம் பற்றிய கிசுகிசு வேகமாக பரவி வருகிறது. இது உண்மையா என்பதை ரச்சிதா தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.