வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதலில் தடுமாற்றத்தை கொடுத்த இந்திய அணி பூரனின் அதிரடியை சமாளிக்க முடியாமல் ரன்களை வாரி வழங்கியது.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பூரன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ந்த வெற்றி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் கூறுகையில்:- ‘2016-ம் ஆண்டுக்கு பின் நாங்கள் டி20 தொடரில் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த டி20 தொடரை வெல்வதற்கான சிறந்த இடத்தில் இருக்கிறோம். வேகப்பந்து வீச்சாளர்களை தொடர்ந்து மாற்றி, மாற்றி பந்து வீச கொடுத்ததற்கு கடுமையான வெயில் தான் காரணம். இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான சாஹல், குல்தீப் மற்றும் பிஷ்னோய் ஆகியோரை சமாளிக்க எங்களுக்கு இடது கை வீரர்கள் தேவை. பூரனும், ஹெட்மேயரும் அதை எதிர்கொள்வது முக்கியம். அதனை களத்தில் செயல்படுத்தினோம்’. இவ்வாறு அவர் கூறினார்.