Saturday, December 28, 2024
HomeSrilankaயாழ் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்ட பெருந் தொகையான கஞ்சா!

யாழ் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்ட பெருந் தொகையான கஞ்சா!

யாழ்ப்பாணம் பொன்னாலையூடாக கடத்தப்பட்ட சுமார் 350 தொடக்கம் 400 கிலோகிராம் வரையான கஞ்சா பொன்னாலை இளைஞர்களால் நேற்றிரவு (05) சனிக்கிழமை மடக்கிப்பிடிக்கப்பட்டது.

பெருந்தொகையான கஞ்சா கடத்தியவர்களில் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டார். ஏனையவர்கள் தப்பியோடியுள்ளனர்.

பிடிபட்ட நபர் பண்டாரவளையை சேர்ந்தவர் எனவும் பண்டத்தரிப்பு – மாதகல் பிரதேசத்தில் திருமணம் செய்தவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொன்னாலை பரவைக்கடல் ஊடாக கடத்திவரப்பட்ட கஞ்சா, பொன்னாலைச் சந்திக்கும் வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கும் இடையில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றப்பட்டபோது பிரதேச இளைஞர்களிடம் சிக்கியது.

குறித்த வாகனத்தின் செயற்பாட்டில் சந்தேகமடைந்த இளைஞர்கள் அதை சோதனையிட முற்பட்டபோதே கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸாரிடம் வாகனத்துடன் கஞ்சா ஒப்படைக்கப்பட்டதோடு மடக்கி பிடிபட்ட நபரும் கையளிக்கப்பட்டார்.

சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதில் பொன்னாலை இளைஞர்கள் இரவு பகலாக தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையிலேயே பெருந்தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments