பாகிஸ்தானில் ரயில் கவிழ்ந்து 22 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து அபோதாபாத் நகருக்கு சென்று கொண்டிருந்த ஹஜாரா எக்ஸ்பிரஸ் ரயில், நவாப்ஷா நகரின் ஷகாரா ரயில் நிலையம் அருகே தடம்புரண்டது. இதில் 8 பெட்டிகள் கவிழ்ந்தன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டு ரயில்வேத்துறை அமைச்சர் கவாஜா சாத் ரபீக் கூறுகையில்,
இது மிகப்பெரிய விபத்து. இதுவரை 22 பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.