Home Srilanka அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கினால் இந்தப் பதவிக் காலத்தில் தீர்வு!

அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கினால் இந்தப் பதவிக் காலத்தில் தீர்வு!

0

“அனைத்துக் கட்சிகளும் எனக்கு ஆதரவு வழங்கினால் மக்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் இந்த ஜனாதிபதிப் பதவிக் காலத்தில் தீர்வு காண்பேன்” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

நாடாளுமன்றம் வந்துள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் சுயலாப அரசியலைக் கைவிட்டு மக்கள் நலன் கருதிச் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறுகிய வட்டத்துக்குள் இருந்துகொண்டு தீர்வு காண்பது தனது நோக்கம் அல்ல என்றும், பரந்துபட்ட கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவரத் தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சர்வகட்சி மாநாடு  சிறந்த களம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version