Home India ஜம்மு காஷ்மீரின் ஹலன் கிராமத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல்.

ஜம்மு காஷ்மீரின் ஹலன் கிராமத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல்.

0

ஜம்மு காஷ்மீரின் ஹலன் கிராமத்தில் கூடாரம் அமைத்துக் கொண்டிருந்த இந்திய இராணுவத்தின் 34 RR மீது நேற்று மாலை ஆயுதமேந்திய பயங்கரவாதிகளின் குழு தாக்குதல் நடத்தியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வீரர்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதாகவும், பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் 3 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகவும், அவர்களில் இருவர் படுகாயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

ராணுவ வீரர்களிடம் இருந்து 4 AK 47 ரக துப்பாக்கிகள் பறிக்கப்பட்டதாகவும், தாக்குதல் நடத்திவிட்டு தீவிரவாதிகள் காட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்றதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version