Home Srilanka 13 ஐ முழுமையாக அமுல்படுத்த இந்தியாவின் அழுத்தம் வேண்டும்! – தமிழ் முற்போக்குக் கூட்டணி கோரிக்கை.

13 ஐ முழுமையாக அமுல்படுத்த இந்தியாவின் அழுத்தம் வேண்டும்! – தமிழ் முற்போக்குக் கூட்டணி கோரிக்கை.

0
The Prime Minister, Shri Narendra Modi being welcomed at the Indian origin Tamil Community function, in Dickoya, Sri Lanka on May 12, 2017.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இதன்போது 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து பேசப்பட்டது எனவும், 13 ஐ முழுமையாக அமுல்படுத்த இந்தியா தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version