எத்தியோப்பியாவில் 2-வது பெரிய பிராந்தியமான அம்ஹாராவில் ராணுவத்துக்கும், உள்ளூர் பானோ போராளிகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த மோதல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அவசரகால நிலை பிரகடனம் செய்து அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோதலை கட்டுப்படுத்துவது கடினமாகி விட்டதால் அவசர நிலையை பிரகடனப்படுத்துவது அவசியம் என்று தெரிவித்துள்ளது. பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரண்ட் இன்றி கைது செய்யும் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.