Home Srilanka யாழில் சங்கமித்தை மர விவகாரம்; சுழிபுரத்தில் பாரிய மக்கள் எதிர்ப்பு எழுச்சி போராட்டம் !

யாழில் சங்கமித்தை மர விவகாரம்; சுழிபுரத்தில் பாரிய மக்கள் எதிர்ப்பு எழுச்சி போராட்டம் !

0

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (05) சுழிபுரத்தில் மக்கள் எதிர்ப்பு எழுச்சி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

”யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என வெளியிடபட்ட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் எனத் தெரிவித்தே குறித்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எழுச்சி போராட்டத்தின் போது தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாகைகளையும் போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.

மேலும் இப் போராட்டத்தினைத் தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பாறளை முருகன் ஆலயம் நோக்கி பேரணியொன்றும் எழுச்சி கொண்ட மக்களால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version